Thursday, April 13, 2006

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அன்பிற்கினிய நண்பர்களுக்கு

மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வரும் வருடம் தங்களின் வாழ்வில் எல்லா வளங்களையும்,நலங்களையும்
அள்ளி வர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

அன்புடன்
இரவி பாலசுப்ரமணியன்.

Tuesday, April 11, 2006

வெள்ளியங்கிரி மலை ஒரு தரிசனம்.


Source :www.Southkailash.com

இந்த புகைப்படம் ஏழாவது மலையில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் சந்நிதியில் அதிகாலையில் எடுக்கப் பட்டிருக்கிறது.

வெள்ளியங்கிரி மலை பயணம் - 2

வெள்ளியங்கிரி மலை மொத்தம் 7 மலைகளை கொண்டது.இதில் முதல் மலையும் இரண்டாம் மலையும் சிறிது செங்குத்தாக இருக்கும்.மூன்று மற்றும் நான்காம் மலையும் சிறிது சமதளங்களும் பள்ளமும் மேடும் நிறைந்ததாக இருக்கும்.ஐந்தாம் மலை மிக கடினமான கீழ் நோக்கி சரிவான பயணமாக இருக்கும்.ஆறாவது மலையின் முடிவில் ஒரு சுனை இருக்கும்.அதன் அருகில் ஒரு டீக்கடை.அங்கிருந்து ஒரு நெடிய பயணம் ஏழாவது மலையை அடைய ஒரு செங்குத்தான பயணம் மெற்கொண்டால் அய்யன் வெள்ளியங்கிரி நாதனை தரிசிக்கலாம்.

வெறுங்காலுடன் கடல் மட்டத்திலிருந்து 2000 அடிக்கு மேல் பயணம்.கரடு முரடான பாதையில்,சித்ரா பெளர்ணமி வேளையில் கையில் கழியோடு பயணம் ஆரம்பம்.

Tuesday, April 04, 2006

வெள்ளியங்கிரி மலை பயணம் - I

காலண்டர் தேதியை கிழிக்கும் போது ஏப்ரல் மாதம் என்பதை பார்த்தவுடன் மனம் பழைய நினைவுகளை புரட்டியது.தமிழ்ப் புத்தாண்டிற்கு பிறகு வரும் சித்ரா பெளர்ணமியை எதிர்பார்த்து ஒவ்வொரு வருடமும் காத்திருப்பேன்.

சித்ரா பெளர்ணமி நாளன்று இரவு 8 மணியளவில் நண்பர்களுடன் கோவை பேருந்து நிலையத்திலிருந்து பூண்டி செல்லும் பேருந்தில் ஏறி ஓன்றரை மணி நேர மூர்ச்சையாக்கும் பயணம் சென்றால் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை அடைவோம்.
அடிவாரத்தில் எங்களது இரவு உணவை முடித்துக் கொண்டு தேவையான அளவு திண்பண்டங்களை வாங்கி எங்கள் பைகளில் அடைத்துக் கொண்டு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலை நோக்கி நடப்போம்.வழியில் நல்ல வாகுவான மூங்கில் கழி ஒன்றை கடைக்காரரிடம் வாங்கிக்கொண்டு வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு ஜே போட்டு விட்டு மலையின் முதல் படியில் கால் வைப்போம்.

Hi

Hi All

I am back again with this blog.I am planning to write about the places in and around coimbatore where i visited and enjoyed a lot.

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]