Tuesday, April 04, 2006

வெள்ளியங்கிரி மலை பயணம் - I

காலண்டர் தேதியை கிழிக்கும் போது ஏப்ரல் மாதம் என்பதை பார்த்தவுடன் மனம் பழைய நினைவுகளை புரட்டியது.தமிழ்ப் புத்தாண்டிற்கு பிறகு வரும் சித்ரா பெளர்ணமியை எதிர்பார்த்து ஒவ்வொரு வருடமும் காத்திருப்பேன்.

சித்ரா பெளர்ணமி நாளன்று இரவு 8 மணியளவில் நண்பர்களுடன் கோவை பேருந்து நிலையத்திலிருந்து பூண்டி செல்லும் பேருந்தில் ஏறி ஓன்றரை மணி நேர மூர்ச்சையாக்கும் பயணம் சென்றால் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை அடைவோம்.
அடிவாரத்தில் எங்களது இரவு உணவை முடித்துக் கொண்டு தேவையான அளவு திண்பண்டங்களை வாங்கி எங்கள் பைகளில் அடைத்துக் கொண்டு வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலை நோக்கி நடப்போம்.வழியில் நல்ல வாகுவான மூங்கில் கழி ஒன்றை கடைக்காரரிடம் வாங்கிக்கொண்டு வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு ஜே போட்டு விட்டு மலையின் முதல் படியில் கால் வைப்போம்.

Comments:
Hello Ravi,

Good to see your blog. I still miss everything about coimbatore! Keep blogging!
 
நன்றி திரு ஜெயகாந்தன் அவர்களே!

நானும் சென்னையில் இருப்பதால் கோவையின் அரவணைப்பை இழந்து விட்டதாக உணர்கிறேன்.மீண்டும் எழுதுவேன்.உற்சாகமூட்டியமைக்கு மீண்டும் ஒரு நன்றி.

பா.இரவி
 
நானும் கோவையின் அரவணைப்பை இழந்து விட்டதாக உணர்கிறேன்.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home

This page is powered by Blogger. Isn't yours?

Subscribe to Posts [Atom]